2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம்

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


 'தேசிய மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரத்தையொட்டி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள்  அகற்றிய இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் புதன்கிழமை (28) ஆரம்பமாகியது.

திங்கட்கிழமை (26)  ஆரம்பமாகிய 'தேசிய மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம்'  ஜுன் மாதம் 02ஆம் திகதிவரை கடைப்பிடிக்கப்படும்.

இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைக்காக,  நிறுவனங்களோ,  பொதுமக்களோ இலத்திரனியல் கழிவுகளை கொண்டுவந்து ஒப்படைக்கமுடியும்.

இவ்வாறே கரைதுறைப்பற்று பிரதே சபை வளாகத்தில் வியாழக்கிழமை (29)  முல்லைத்தீவிலுள்ள நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது  இலத்திரனியல் கழிவுகளை ஒப்படைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X