2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

உயர்தர மாணவனை காணவில்லை

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வவுனியா, கல்மடு பிரதேச பாடசாலையொன்றில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவனொருவரை காணவில்லை என அம்மாணவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தரணிக்குளம், சாஸ்திரி கூழாங்குளம் எனும் பிரதேசத்தைச் சேர்ந்த மகாலிங்கம் றஜீவன் என்ற மாணவனே, நேற்று செவ்வாய்க்கிழமை (27) முதல் காணாமல் போயுள்ளார் என அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டிலிருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு, 10 கிலோ பயிற்றங்காய்களுடன் புறப்பட்டுச் சென்ற அம்மாணவன், அவற்றை வவுனியா நகரப்பகுதியிலுள்ள தினசரி சந்தை வியாபாரியொருவரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர், தான் பயணித்த மிதிவண்டியை குறித்த வியாபாரியின் மரக்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி விட்டு எதிர்ப்பக்கமாகவுள்ள பாடசாலை உபகரண விற்பனை நிலையத்துக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்ற மாணவன், இதுவரையில் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், குறித்த மாணவனுடைய பெற்றோரால் வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தரணிக்குளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமும் முறையிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X