2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சீரான சேவை வழங்க போக்குவரத்து சங்கங்கள் முன்வர வேண்டும்: டெனிஸ்வரன்

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடந்த யுத்த இன்னல்களிலிருந்து மீண்டு ஒரு சுதந்திர வாழ்க்கை வாழ முயற்சிக்கும் எம்மக்களுக்கு போக்குவரத்து மிக முக்கியமானது. இச்சேவையை சீராக வழங்க அனைத்து போக்குவரத்துச் சங்கங்களும் முன்வரவேண்டுமென வடமாகாண  போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் புதன்கிழமை (28) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வடமாகாணத்தின் 101  நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் இன்னும் சில நாட்களில் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களினதும் பேருந்து உரிமையாளர் சங்கக் கூட்டங்கள் விரைவில் நடைபெறவுள்ளது.  இது தொடர்பான மேலதிக விபரங்களை நாவலர் வீதியிலுள்ள வடமாகாண மீன்பிடி போக்குவரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சில் பெற்றுக்கொள்ளலாம் என்பதை  சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்துகின்றேன்.

அத்துடன், தனியார் மற்றும் அரசியல் செல்வாக்குகளுக்கு உட்பட்டு தன்னிச்சையாக இயங்கும் சங்கங்கள் மீது வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் சுற்றுநிரூபம் வெளியானதும் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, அனைத்துச் சங்கங்களும் உரிய நியதியை கடைப்பிடித்து மக்களுக்கு சிறந்த சேவை ஆற்ற முன்வரவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X