2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

குளறுபடி செய்யும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மீது உடன் நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

'நிர்வாகங்களை இயங்கவிடாது குளறுபடி செய்யும் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும்' என வட மாகாண போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் புதன்கிழமை (28) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பல கிராமங்களினதும் அக்கிராம மக்களினதும் முன்னேற்றத்துக்கு காரணமாக அமைவது கிராம அபிவிருத்திச் சங்கங்களும் மாதர் அபிவிருத்திச் சங்கங்களும் தான். கடந்த காலங்களிலே  கிராம அபிவிருத்தியின் பல திட்டங்கள் இச் சங்கங்களுடாகவே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் பல கிராம அபிவிருத்தி சங்கங்கள் இயங்காது இருப்பதும் பல கிராம அபிவிருத்திச் சங்கங்களில் நிதி மோசடி ஏற்பட்டிருப்பதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றவென மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளை கொண்ட ஒரு அமைப்பே கிராம அபிவிருத்திச் சங்கமாகும். இது மக்களின் ஒருமித்த கருத்தாக அமைய வேண்டும். இதில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது அனைத்து மக்களும் பங்காளிகளாக இருக்க வேண்டும் அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

வடமாகாணத்தில் உள்ள அனைத்து கிராம அபிவிருத்திச் சங்கங்களினதும் கணக்குகளை சீர்செய்யவும், இயங்காது இருக்கும் கிராம அபிவிருத்திச் சங்கங்களை புனரமைப்பு செய்யவும்  உரிய உத்தியோகத்தர்கள் நடவடிக்ககை எடுக்க வேண்டும்.

இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0755451485 என்ற இலக்கத்துக்கு முறையிடலாம் என்றும் புதிய இலக்கத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X