2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

புகைத்தலுக்கு எதிராக ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 மே 29 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


உலக புகையிலை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஊர்வலமொன்று நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலிலும் தொற்றாநோய் தடுப்பு வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமையவும்  முசலி சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில், சிலாபத்துறை வைத்தியசாலைக்கு முன்பாக  ஆரம்பமான  ஊர்வலம்  முசலி பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.

இதில் முசலி சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ், சிலாபத்துறை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.முரளி, சிலாபத்துறை வைத்தியசாலை பணியாளர்கள், மன்னார் மாவட்ட சுகாதார கல்விப் பிரிவினர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, இவர்கள் புகையிலை பாவனைக்கு எதிரான பதாதைகளை ஏந்திச் சென்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X