2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. அனர்த்த முகாமைத்துவ குழுவுடன் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 மே 29 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன் 


மட்டக்களப்பிலிருந்து வருகைதந்த அனர்த்த முகாமைத்துவக் குழுக்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் மாற்றுத்திறனாளிகள் தொண்டர்; குழுக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது விழிப்புணர்வுக் கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் க.சுகுணதாஸன், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் எஸ்.ரூபராஜ், கிளிநொச்சி மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் தி.சிவமாறன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.இன்பராஜ் தலைமையிலான குழுவினர்; புதன்கிழமை (28) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இடங்களைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X