2025 ஜூலை 16, புதன்கிழமை

ஆசிரியர் தாக்கி மாணவி வைத்தியசாலையில்

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவியொருவரை தாக்கியதில், குறித்த மாணவி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு. அகிலேந்திரன் வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.

ஆசிரியரின் உத்தவுக்கமைய பாடசாலையில் செயற்படவில்லை என்பதனால் ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் கழுத்துப்பகுதியில் ஏற்பட்ட உபாதையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபரிடம் கேட்டபோது,

மாணவி ஒருவர் கழுத்து நோ காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மாணவர் தவறு செய்தமையால் ஆசிரியர் தண்டித்துள்ளார். அது தவறுதலாக பெரிதாக மாறிவிட்டது. மாணவர்களின் நன்மை கருதியே ஆசிரியர் தண்டித்தார். இது தொடர்பில் எமது பாடசாலை நிர்வாகம் கலந்துரையாடி முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

இம்மாணவி 4ஆம் தரத்தில் பயிலுபவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .