2025 ஜூலை 16, புதன்கிழமை

மீன்குஞ்சு வைப்பிலிடுதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்: டெனீஸ்வரன்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பொ.சோபிகா


நன்னீர் மீன்பிடியாளர்கள் 700 பேரைக் கொண்ட கட்டுக்கரைகுளத்திலும் 200 நன்னீர் மீன்பிடியாளர்களை கொண்ட இரணைமடுக்குளத்திலும் தலா 75,000 மீன்குஞ்சுகள் தற்போது வைப்பிலிடப்பட்டுள்ளதாக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மீன்குஞ்சுகள் குளங்களில் வைப்பிலிடும் நடவடிக்கை தொடர்பாக திங்கட்கிழமை (22) அவரிடம் கேட்டபொழுதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,

'வடமாகாணத்திலுள்ள குளங்களில் மீன்குஞ்சுகள் வைப்பிலிடும் நடவடிக்கை படிப்படியாக முன்னெடுக்கப்படும். நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

இத்திட்டத்துக்காக 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்மட்ட உயர்வுக்கு ஏற்ப கட்டம் கட்டமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மேலும் மீன்குஞ்சுகள் வைப்பிலிடப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட மீன்பிடிச் சங்கங்கள் மீன்பிடியில் ஈடுபடும் குளங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு மீன்குஞ்சுகள் வைப்பிலிடும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் பல குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்றார்கள்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .