2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து கைக்குண்டு இன்று வியாழக்கிழமை (02)  மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கிணற்றை ஆழமாக்கி துப்பரவு செய்தபோது, கைக்குண்டு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பில் காணி உரிமையாளர்,  வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இந்த நிலையில் அங்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இந்தக் கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.

இந்தக் கிணற்றில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதனை  விசேட அதிரடிப்படையினர் முழுமையாக சோதனையிட்ட பின்னரே, கிணற்றை ஆழமாக்குமாறு பொலிஸாரால் காணி உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் யுத்தகாலத்தின்போது வேப்பங்குளம் இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .