2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சூரிய சக்தி தெருவிளக்குகளை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு

George   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மடு பிரதேசத்தில் சூரிய சக்தி தெருவிளக்குகள், வெள்ளிக்கிழமை(03) காலை வடமாகாண மீன்பிடி போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரனால் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு மாந்தை  மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ்.வரப்பிரகாசம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.பீட்டர்,எம்.ராசசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் மின்னிணைப்பு வழங்கப்படாத கிராமங்களான தட்சனா மருதமடு, கீரி சுட்டான், முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள்; நன்மை அடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .