2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேவைகளை கேட்டுப் பெற வாக்களித்த மக்களுக்கு உரிமையுள்ளது: ப.சத்தியலிங்கம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வாக்களித்த மக்கள், தங்களது தேவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்ள உரிமையுள்ளது. அதை நிறைவேற்றவே உங்களை நாடி வந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா, மகிழங்குளம் பகுதியில் சனிக்கிழமை (04) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இம்முறை மாகாணசபைத் தேர்தலின்போது வாக்களிப்பது உங்கள் கடமை. வாக்களிப்பது உங்கள் உரிமை என்ற தாரக மந்திரத்தை எனது தேர்தல் கால பிரசாரங்களில் பயன்படுத்தியிருந்தேன்.

நீங்கள் உங்கள் கடமையை சிறப்பாக செய்திருந்தீர்கள். அந்தக் கடமையுடன் உங்கள் வேலை முடியவில்லை. உங்களால் தெரிவுசெய்யப்பட்ட எங்களிடம் உங்கள் தேவையை உரிமையுடன் கேளுங்கள்.

நான் கேட்டதை நீங்கள் செய்துவிட்டீர்கள். இன்று உங்களிடம் வந்துள்ளேன் நீங்கள் கேட்பதை செய்வதற்காக.  இன்று எமது மக்களின் தேவை நாட்டின் ஏனைய மாகாணங்களின் மக்களை விட வேறானது. 30 வருட யுத்தத்தால் அனைத்தையும் இழந்து பூச்சியத்திலிருந்து வாழ்க்கையை நீங்கள் ஆரம்பித்துள்ளீர்கள்.

 உங்களுக்கு தெரியும் எமது மாகாணசபை தெரிவுசெய்யப்பட்டு ஒரு வருடமாகிறது. இந்த ஒரு வருடத்தில் நாம் என்னத்தை சாதித்தோம் என்று நீங்கள் கேட்கலாம்.

மத்திய அரசானது எமது மாகாண நிர்வாகத்தை உரியமுறையில் இயங்காது தடுக்க பல வழிகளிலும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. எனினும், மனம் தளராது குறைந்தளவிலான அதிகாரத்தைக் கொண்டு இயலுமானவரை மக்களுக்கான சேவையை செய்து வருகிறோம்' என்றார்.

இதன் பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னடம்பன் பாரதி வித்தியாலயத்துக்கு வடமாகாண சுகாதார அமைச்சரினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்,  அனந்தர்புளியங்குளம் நாகதம்பிரான் கோவிலுக்கு கட்டட நிதிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .