2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிராம அலுவலர்களுக்கு நிரந்தர நியமனம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றுவதற்காக 28 கிராமஅலுவலர்களுக்கான நியமனக் கடிதங்கள், யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து சனிக்கிழமை  (04) வழங்கப்பட்டதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்து.

அத்துடன், வடமாகாணத்தில் மேலும் 19 கிராம அலுவலர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், அதற்கான நியமனங்களில் 9 பேருக்கான நியமனங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டது.

இதேவேளை, வடமாகாணத்தில் கிராம அலுவலர்களாக நியமனம் பெற்றவர்களில் சிலர், வெளிநாடுகளுக்கு சென்றமை மற்றும் வேலையை விட்டு சென்றமையால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம அலுவலகங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டன.

இந்த வெற்றிடங்களை நிரப்பவதற்காக கிராம அலுவலர் பரீட்சையில் சித்தியடைந்து காத்திருப்பு நிலையில் இருந்தவர்கள் தற்போது உள்ளீர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .