2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இராணுவத்தினர் காணிகள்; அபகரிப்பதை எதிர்க்கிறோம்: எஸ்.துஸ்யந்தன்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


இராணுவத்தினர், தமிழர் பிரதேசங்களில்; காணிகள்  அபகரிப்பதை தாம் முழுமையாக எதிர்ப்பதாக தமிழ்த்  தேசிய முன்னணியின் தலைவர் எஸ்.துஸ்யந்தன் தெரிவித்தார்.

தமிழ்த்  தேசிய முன்னணியின் வவுனியா அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இன்று சர்வதேச பொறிமுறை என்பதை  நாம் எமது பார்வையில் எடுத்துக்கொள்ளும்போது பாரிய யுத்தம் இடம்பெற்று மனித அழிவுகள், சொத்து அழிவுகள் உட்பட பாரிய அழிவுகள் இடம்பெற்றன. அதன்போது அவற்றை நிறுத்தியிருந்தால் இன்று இந்த விசாரணை தேவையற்ற ஒன்று. எனினும், சர்வதேச விசாரணை பிழையான ஒன்று என சொல்வதற்கு நாம் தயார் இல்லை. ஏனெனில், பல பிரச்சினைகளும் பேரழிவுகளும் அங்கு இடம்பெற்றிருக்கின்றன. எனவே நாங்கள் சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கமுடியாது.

மேலும், இராணுவம் தமிழர் பகுதிகளில்; காணிகள் ஆக்கிரமிப்பதை  நாம் முழுமையாக எதிர்க்கின்றோம். அது தமிழ்ப் பிரதேசங்கள். அங்கு அவர்களுக்கான காணிகள் இருந்ததற்கான வரலாறுகள் இல்லை. எனவே நாம் எதிர்க்கின்றோம்.

 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும்.  அண்மையில் யாழ்ப்பாணத்தில் இதற்காக உண்ணாவிரதம் இடம்பெற்றிருந்தது. அவ்வாறான போராட்டங்களுக்கு எமது ஆதரவு என்றும் இருக்கும். எனவே, அரசாங்கம் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாமும் அரசுக்கு பல தடவைகள் எடுத்துக் கூறியுள்ளோம். அதற்கு அவர்களும் துரிதப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .