2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அனுமதியின்றி கட்டப்பட்ட வர்த்தக நிலையங்கள் இடிக்க காலஅவகாசம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 8 வர்த்தக நிலையக் கட்டடங்களை அகற்றுவதற்காக 14 நாட்கள் காலஅவகாசம் கொடுக்கும் நீதிமன்ற அறிவித்தல் துண்டுப்பிரசுரம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அந்தந்த கட்டடங்களில்; ஒட்டப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபை பொதுச்சுகாதார பரிசோதகர் பி.சிவகுமார் திங்கட்கிழமை (06) தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபை சட்டத்தின் பிரிவு 52 இன் கீழ் எந்த அனுமதியும் பெறாது கட்டப்பட்ட கட்;டடங்களையும் பிரதேச சபையின் தீர்மானத்துக்கு அமைய பிரதேச சபை தவிசாளரது அனுமதியுடன் இடித்து அகற்ற முடியும் என கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கூறியது.

அதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஏ – 9 வீதியில் 15 வர்த்தக கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டமை அடையாளம் காணப்பட்டது.

அவற்றில் முதற்கட்டமாக 8 கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கான அனுமதி கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது.
இடிப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, கட்டடங்களின் உரிமையாளர்கள் 14 நாட்களுக்குள் கட்டடங்களை அகற்றுவதற்குரிய காலஅவகாசம் வழங்கும் துண்டுப்பிரசுரம் உரிய கட்டடங்களில் தற்போது ஒட்டப்பட்டுள்ளன.

காலஅவகாசத்திற்குள் அகற்றப்படாத கட்டடங்களை அகற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .