2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஜெயக்குமாரி உட்பட அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கவனயீர்ப்பு போராட்டம்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2014) வவுனியா நீதிமன்றத்தின் முன்பாக  அமைதியாக  கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தரொருவர் தெரிவிக்கையில்,

'ஜெயக்குமாரியை நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்வதற்கும் மற்றும் நீண்டநாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளையும் விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தியும்  வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் முன்பாக கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து மக்கள் தமது துக்கத்தை வெளிபடுத்தும் கவயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

எனவே  வடக்கு, கிழக்கில் உள்ள சகல பிரஜைகள் குழுக்கள், கட்சிகள், கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள்,  முதலமைச்சர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களை சேர்ந்ததோர், மனித உரிமை அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கல்விச்;சமூகத்தினர், அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தோர், ஊடகவியலாளர்கள் பலரையும்; கலந்துகொள்ளுமாறு வவுனியாமாவட்ட பிரஜைகள் குழுவினார் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .