2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மீது கல்வீச்சு

Thipaan   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக திருகோணமலைக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான பேருந்து மீது, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து திங்கட்கிழமை (06) மாலை கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டம் ஊடாக திருகோணமலை வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்ட புதிய பேருந்து ஒன்றின் மீதே இவ்வாறு கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வீச்சில் பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .