2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மறு அறிவித்தல் வரும் வரை நந்திக்கடலில் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரும் வரை நந்திக்கடலில் மீன்பிடிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக, வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடிக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் வைரையா மாயான்டி வெள்ளிக்கிழமை (10) அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட பொதுசுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளுக்கு அமையவே தமது சங்கம் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த இருவாரங்களுக்கு முன்னர் நந்திக்கடலில் இறந்த நிலையில் மீன்கள் கரையொதுக்கியிருந்தன. இவ்வாறு கரையொதுங்கிய மீன்களை எமது சங்கத்திலுள்ள 75க்கும் அதிகமான மீனவர்களின் உதவியைக்கொண்டு சுத்தம் செய்தோம்.

அதன்பின்னர் தற்போது நிலமை வழமைக்கு திரும்பியிருந்தாலும் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே நாம் செயற்படவேண்டியுள்ளது.

மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியமையால் நந்திக்கடல் நீரில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மழை பெய்தால் இந்நீரில் மாற்றங்கள் ஏற்படும். அதன் பின்னரே மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முடியும்.

எனவேதான், சுகாதார அதிகாரிகளின் கட்டளை வந்ததன் பின்னரே வழமை போல தொழிலை மேற்கொள்ள மீனவர்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .