2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் காலமானார்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவரும் கட்சியின் மூத்த உறுப்பினருமான டேவிட் நாகநாதன் தனது 78ஆவது வயதில் சனிக்கிழமை (11) மாலை வவுனியாவில் காலமானார்.

பண்டாரிக்குளத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,   நாளை திங்கட்கிழமை (13) மாலை இறம்பைக்குளத்தில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் தி.கோபிநாத் தெரிவித்தார்.

பல ஆண்டு காலமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்திய இவர், பல அஹிம்சை வழிப்போராட்டங்களிலும்; பங்கேற்றிருந்தார்.

கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர், இறுதியாக தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .