2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் விருது போட்டிகள்

Thipaan   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்படும் முல்லைத்தீவு மாவட்ட மட்ட 2014 ஸ்ரீ லங்கா யூத் தேசிய விருதுப் போட்டி, எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளியவளை வித்தியானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம். சசிகுமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மாற்றுத் திறனுடைய (Differently Abler) இளைஞர் யுவதிகளுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ், ஆங்கில மொழிகள் மூலமான போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக சசிகுமார் தெரிவித்தார்.

 அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர், கிராமியப் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், பரத நாட்டியம், கதக், அபிநய நாடகம், சாஸ்திரிய இசை, மேலைத்தேய இசை போன்ற போட்டிகள் தமிழிலும் ஆங்கில மொழியில் அறிவிப்பாளர், பேச்சு, இளம் பாடகர் போட்டிகள் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சிங்கள் மொழி மூலமான போட்டிகள் விரைவில் வெலிஓயாவில் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போட்டிகளுக்கான ஆக்கங்களை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மாவட்டப் பணிமனை, ஏ- 9 வீதி, மாங்குளம், முல்லைத்தீவு என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும் எனவும்  பிரதேச செயலகங்களிலுள்ள இளைஞர் சேவை அதிகாரிகளிடம்  சமர்ப்பிக்க முடியும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எம். சசிகுமார் அறிவித்துள்ளார்.

இதற்கமைய நாவல், சிறுகதை, கட்டுரை, பாடலியற்றல், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், சிறுவர் இலக்கியம் (கவிதை, கதை) போன்ற போட்டிகளுக்கும் தமிழ், சிங்கள பொதுப் போட்டிகளான சித்திரம், புகைப்படம், சிற்பங்கள் போன்றவற்றுக்குமான ஆக்கங்களை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
 
சகல போட்டிகளிலும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குகொள்ளலாம் அதேவேளை, நாடகப் போட்டிகளுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 0212060017 / 0772350374 என்ற தோலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .