2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பேசாலை வீதியோர பெயர்ப்பலகை மீது கழிவு எண்ணெய் வீச்சு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 14 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள பேசாலை கிராமத்தை அடையாளப்படுத்தும் வீதியோர பெயர்ப்பலகை மீது நேற்று திங்கட்கிழமை இரவு (13) இனந்தெரியாத நபர்;களினால் கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் இருந்து பேசாலைக்கு வரும் வீதியில் பேசலை கிராமத்தின் எல்லையை அடையாளப்படுத்தும் வகையில் சீமேந்தினால் குறித்த பெயர்ப்பலகை தயாரிக்கப்பட்டு வீதியோரத்தில் நாட்டப்பட்டுள்ளது. அதில் பேசாலை என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே குறித்த பெயர்பலகை மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பேசாலை கிராம முக்கியஸ்தர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .