2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யுத்தத்தில் உயிரிழந்த ஆசிரியர்களுக்கு அஞ்சலி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, யுத்தத்தில் உயிரிழந்த ஆசிரியர்களை நினைவுகூர்ந்து முல்லைத்தீவு, கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடாசாலையில் விசேட அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடாசாலை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றது.

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் உதயராணி முனீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது இறுதிக்கட்ட போரினால் உயிரிழந்த அனைத்து ஆசிரியர்களின் நினைவாக அவர், மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தார். அத்துடன், வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட வலயக்கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .