2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

'மக்களை நோக்கிய சேவை' என்ற தொனிப்பொருளில் வடமாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ்,  வடமாகாணசபையும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள  புளியங்குளத்தில் எதிர்வரும் 17ஆம் 18ஆம் திகதிகளில்  காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு கல்விப் பணிமனையில்,  மாகாண கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் விளையாட்டத்துறை அமைச்சின் நடமாடும் சேவையும் மீன்பிடி, கைத்தொழில், கிராம அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் நடமாடும் சேவையும் நடைபெறும்.

புளியங்குளம் இந்துக்கல்லூரியில் உள்ளூராட்சி அமைச்சு, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, காவல்துறை, சமுர்த்தி, பிறப்பு இறப்பு பதிவாளர், காணி அமைச்சு ஆகியவற்றின் சேவைகளையும் புளியங்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சுகாதாரத் திணைக்களம் மற்றும் சுதேச வைத்தியத் திணைக்களத்தின் சேவைகளையும் பெறமுடியும் எனவும் அவர் கூறினார். 

இதன்போது, மக்களின் போக்குவரத்து சேவைகளையும் இலவலசமாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .