2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மொழி மீது அளவற்ற பற்றுக்கொண்டவர் : இந்து சமய பிரமுகர்கள்

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடபுலம் கலாசார மையமாக திகழ்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முக்கிய காரணகார்த்தாவாக விளங்குகின்றார் என மன்னார் மாவட்ட இந்து சமய பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நேற்றைய வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்ற இந்து சமய பெரியார்கள் மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவற்ற பற்றுக்கொண்டவர். அதன்காரணமாகத்தான் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சிலைகளை நிறுவியுள்ள அதேவேளை, தமிழில் தொண்டாற்றியோருக்கும் சிலைகளையும் நிறுவி வருகின்றார்.

அதுமட்டுமன்றி தமிழ்மொழியின் முன்னேற்றத்திற்கும் ஆக்கத்திற்கும் பல்வேறுபட்ட உதவித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார். அதுமட்டுமன்றி ஆன்மீகத்தையும் வளர்த்தெடுக்கும் முக்கிய பணியையும் சமவேளையில் ஆற்றி வருகின்றார்.

இதனடிப்படையில் தான் மன்னார் மாவட்டத்தில் அறநெறிப் பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் அதன்மேம்பாட்டுக்காகவும் நிதியுதவிகளையும் வழங்கி தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இன்றுள்ள சூழலில் வடபுலத்தில் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுக்கும் வகையில் திட்டங்களை வகுத்து அவற்றை சிறந்த முறையிலும் செயற்படுத்தி வருகின்றார்.

இவ்வாறாக வடபகுதியில் தமிழ் மொழியை மட்டுமன்றி கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதற்கும் வடபுலம் கலாசார மையமாக திகழ்வதற்கும் அமைச்சர் டக்ளஸ் வேதானந்தா முக்கிய காரணகார்த்தாவாக விளங்கி வருகின்றார் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே மன்னார் மாவட்ட கோவில்களின் புனரமைப்பு அவற்றின் தேவைப்பாடுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் இதில் விரிவாக கலந்துரையாப்பட்டது.

அதனடிப்படையில் அம்மாவட்டத்திலுள்ள ஐந்து இந்து கோவில்களுக்கு கணினித் தொகுதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .