2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சூரன் போர் பார்க்க சென்ற மாணவனை காணவில்லை

Gavitha   / 2014 நவம்பர் 04 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத் 
வவுனியா, புளியங்குளம் பனிக்கநீராவி பகுதியை சேர்ந்த சந்திரகுமார் சுகிர்தன் (16 வயது) என்ற மாணவனை காணவில்லை என அவரின் தாயார் சந்திரகுமார் ஜெயசித்திரா, திங்கட்கிழமை (03) முறைப்பாடு செய்துள்ளதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜே.ஜெயகெனடி தெரிவித்தார்.
 
வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வரும் சுகிர்தன், கடந்த புதன்கிழமை (29) சூரன் போர் பார்ப்பதற்காக  வவுனியா நகருக்கு சென்றிருந்த நிலையில் அவர் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவ்விடயம் தொடர்பில் அவரது தாயார் குறிப்பிடுகையில்,
 
எனது மகன் கடந்த புதன்கிழமை சூரன் போர் பார்க்க சென்று அன்றைய தினம் வீடு திரும்பவிலலை. எனினும், மறுநாள் வியாழக்கிழமை (30) வவுனியா, கற்குழி பகுதியிலுள்ள வீடுறொன்றில் நின்றதை பலர் கண்டுள்ளனர்.

அன்று இரவு 8 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளான். ஆனால்,இன்று வரை வீடு வந்து சேரவில்லை. எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ளான் என தெரிவித்தார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .