2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் கடற்பாசி உற்பத்தி மும்முரம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 09 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

கிளிநொச்சி மாவட்டத்தில் கடற்பாசி உற்பத்தி திட்டம் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் அதிகாரி எஸ்.சலீபன் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்இ

கிளிநொச்சி மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் ஆரம்பமாகியது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கடற்பாசி வர்த்தக ரீதியான ஏற்றுமதி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கடற்பாசி உற்பத்தியை 100 குடும்பங்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்றன. இந்த கடற்பாசி வளர்க்கும் தொழில் நடவடிக்கையில் 300 குடும்பஙங்களை இணைக்க வேண்டும் என்பதே எமது இலக்காக உள்ளது.

இந்த தொழிலை மீனவர்களே அதிகளவில் மேற்கொள்கின்றனர். ஒரு நாளில் மீன்பிடிக்கு செல்லும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் 2 அல்லது 3 மணித்தியாலங்கள் இந்த தொழிலுக்கு செலவிட்டால் போதுமானது.

அந்த குடும்பங்களின் பெண்களும் இந்த தொழில் ஈடுபடுகின்றனர். இது அவர்களின் மீன்பிடி தொழில் வருமானத்தைவிட மேலதிக வருமானத்தை ஈட்டி தரக்கூடிய தொழிலாக இருக்கின்றது.

இந்த தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் செயற்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் 50 குடும்பங்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த கடற்பாசியால் பல குடும்பங்கள் பயன்பெறுவதுடன்இ கடலில் மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிகின்றது.

இந்த உற்பத்தி யாழ்.மாவட்டத்தின் நயினாதீவுஇ சாட்டிஇ மாதகல் ஆகிய இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கு கடற்பாசி வளர்ப்பதற்குரிய சூழல் காணப்படுகின்றது.

மன்னார் முதல் ஊர்காவற்றுறை வரையான கடற்பகுதி அலைகள் குறைவாக உள்ளதால்இ நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு அங்கு சாத்தியமாகின்றது. கடற்பாசிகள் வளர்க்கும் போதுஇ கடலில் கூடுகள் கட்டி அதனுள் கடற்பாசிகளை வளர்ப்பதாகும்.

இதனை கடலிலே விட்டால் மீனினங்களின் பெருக்கங்கள் அதிகரிக்கும். அத்துடன் உரிய காலங்களில் அவற்றை அறுவடை செய்து வர்த்தக ரீதியில் ஏற்றுமதியும் செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .