2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

உடையார்கட்டு கமநலசேவை நிலையம் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, உடையார்கட்டு கமநலசேவை நிலையக் கட்டடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் 11.7 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படுவதாக அக்கமநலசேவை நிலைய நிர்வாகம் திங்கட்கிழமை (10) தெரிவித்தது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக உடையார்கட்டு கமநலசேவை நிலையக் கட்டடம் சேதமடைந்து, பெருமளவான சொத்துக்களும் அழிவடைந்தன.

2011ஆம் ஆண்டு மேற்படி பகுதி மக்கள் மீள்குடியேறியதை அடுத்து,  சேதமடைந்த கட்டடத்தின் ஒருபகுதியில் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் கமநலசேவை நிலையம்  இயங்கிவந்தது.

இதனால், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள்,  உள்ளீடுகள் என்பவற்றை வழங்குவதில் பல்வேறு நெருக்;கடிகளை எதிர்கொண்டுவந்த நிலையில், இந்த வருடம்  மேற்படி கமநல சேவை நிலையம் புனரமைப்புக்கு தெரிவுசெய்யப்பட்டு, புனரமைப்பு பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த வருட இறுதிக்குள் புனரமைப்பு பணி நிறைவடையும் எனவும் கமநலசேவை நிலைய நிர்வாகம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .