2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அழைப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

மழை காரணமாக மன்னாரில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (29) அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 5 பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 15 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லை. தொண்டு நிறுவனங்களிடம் உதவி செய்யுமாறு கேட்டுள்ளோம்.

வரப்போகும் புதுவருடத்தை துன்பமின்றி வரவேற்க அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .