2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'மாங்குள பொதுச்சந்தை கட்டுமானப்பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவடையும்'

Thipaan   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு, மாங்குளம் பொதுச்சந்தையின் கட்டுமானப் பணிகள் நெல்சீப் திட்டத்தின் 55 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.மிதிலைநாதன், செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தார்.

இக் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழுள்ள இந்த சந்தையின் கட்டடங்கள் இறுதி யுத்தத்தில் முற்றாக அழிவடைந்தது.
மாங்குளம் பகுதியில் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, பெருமளவு மக்கள் மீளக்குடியேறினர். மாங்குளம் பொதுச்சந்தை தற்காலிக கொட்டகையில் இயங்கியது.

சந்தைக்கட்டடங்கள் இன்மையால் தாங்கள் பெருமளவு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இதனால் சந்தை கட்டடத்தை அமைத்துத்தரும்படி அப்பகுதி வர்த்தகர்களும் பொதுமக்களும் பிரதேச சபையிடம் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையின் அடிப்படையில் நெல்சீப் திட்டத்தில் கீழ் 2011ஆம் ஆண்டு 55 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கேள்வி அறிவித்தல் மூலம் கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவு செய்யப்பட்டு, கட்டுமானம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என பிரதேச சபைச்செயலாளர் தெரிவித்தார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .