2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சி வைத்தியசாலையில் எலும்பு சிகிச்சை நிபுணர் இல்லை

George   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் எலும்பு சிகிச்சைக்கான வைத்திய நிபுணர் இல்லையென வைத்தியசாலை நிர்வாகம், செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்கும் பிரதான வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை காணப்படுகின்றது. இருந்தும் வைத்தியசாலையில் ஆளணிப்பற்றாக்குறை நிலவிவருகின்றது.

எலும்பு சிகிச்சை தொடர்பான வைத்தியநிபுணர் இல்லாத காரணத்தால் அது தொடர்பான நோயாளிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் கண் சிகிச்சை நிபுணரும் வைத்தியசாலையில் இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .