2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் - யாழ்ப்பாணம் வீதியில் போக்குவரத்து தாமதம்

Thipaan   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார்  - யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியின் பாலியாற்றுப்பகுதியில் வெள்ளநீர் வீதியை ஊடறுத்து பாய்வதால் அவ்வீதியூடான போக்குவரத்து தாமதமடைகிறது.

வீதியின் சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு நான்கு அடி உயரத்தில் வெள்ளநீர் வீதியை மேவிப்பாய்கின்றது.

இதனால் இவ் வீதி ஊடாக வாகனங்கள் பயணிப்பது முற்றாக தடைப்பட்டிருக்கின்றது. வெள்ள நீர் வீதியை ஊடறுத்துப்பாயும் பாலியாறு பகுதியில் உழவு இயந்திரங்கள்  இருவழிப்  போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வருகின்றன.

உழவு  இயந்திர  சேவைக்காக  பயணி ஒருவரிடமிருந்து 50 ரூபாய் கட்டணம் அறவிடப்படுகிறது.

மன்னார் -  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்களை நெறிப்படுத்தும் பொருட்டு பாலியாற்றுப் பகுதியில் வீதிப்போக்குவரத்துப் பொலிஸாரும் படைத்தரப்பினரும் கடமையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மன்னாரில் இருந்து சங்குப்பிட்டி மற்றும் பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்துக்கான ஏ-32 பிரதான வீதி அமைந்திருக்கின்றது. குறித்த வீதி கடந்த மூன்று ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்பட்டு காப்பற் வீதியாக மாற்றப்பட்டுள்ளது.

வீதியின் ஒரு சில இடங்களில் பாலங்கள் மற்றும் மதகுகளுக்கான கட்டுமாணப்பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது.

அதேவேளை,  இப் பகுதியில் வீதியின் இரு கரைப்பகுதியும்; மேலும் சேதமடைவதை தவிர்க்கும் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தடுப்பணைகள் போடப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .