2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அத்துமீறிய மீன்பிடி இடைநிறுத்தப்பட்டுள்ளது -அந்தோனிப்பிள்ளை மரியராசா

George   / 2015 ஜனவரி 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவில் அமைதிப்பேரணி நடாத்தப்பட்ட பின்னர் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, சனிக்கிழமை (03) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம் நடைபெற்ற நாளிலிருந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டுவந்துள்ளோம்.  இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறை ஆகியவற்றால் எமது கடற்;றொழிலாளர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள்.

ஆழ்கடலில் இருந்து கரையினை நோக்கி மீன்கள் வரும் போது அம்மீன்களை மறித்து சுருக்குவலை, லைட் ஆகிய அரசினால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை இடைமறித்து செய்வதன் காரணமாக மீன்கள் ஆழ்கடலுக்கு மீளவும் செல்கின்றன. இதனால் கரையோர மீன்பிடித்தொழில்கள் கடந்த 05 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக பல இடங்களுக்கும் அறிவித்தோம்.

தைமாதம் எங்களுக்கு முக்கிய தொழில் நடைபெறுகின்ற மாதமாகும்.  தைமாதம் இறால் கூடுதலாக பிடிபடுகின்ற காலமாகும்.  இறால் தொழிலை நம்பியிருக்கின்ற இக்காலத்தில் இந்திய றோலர்களின் அத்துமீறல்கள் கூடுதலாக காணப்பட்டன.  ஆனால் போர் காலத்தில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை.

போருக்கு பின்னரான தற்போதைய சூழலில் இந்திய றோலர்களின் நெருக்கடி கூடுதலாகவுள்ளது.  மார்கழி மாதத்திலிருந்தே இந்திய றோலர்களின் நெருக்கடி கூடுதலாகவிருந்தது.  கடந்த 04 ஆண்டுகளாக இதே நெருக்கடி தொடர்கின்றது.  

இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி இந்திய றோலர்களின் மீன்பிடிக்கு எதிராக அமைதிப்பேரணியொன்றினை நடாத்தியிருந்தோம். முல்லைத்தீவு கரையோரத்திலுள்ள 26 மீனவ சங்கங்களின் ஆண்கள் பெண்கள் இணைந்து இவ் அமைதிப்பேரணியினை நடாத்தியிருந்தோம்.  

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற ஒரு அரசியல் காலம் என்பதன் காரணமாக இவ் அமைதிப்பேரணி பெரும் வெற்றியினை அளித்துள்ளது.  

இந்திய றோலர்களின் வரவு தற்போது குறைவடைந்துள்ளது.  இந்திய றோலர்களின் வரவு தொடர்ந்து தடைசெய்யப்படவேண்டும்.  தேர்தல்; முடிந்த பின்னரும் இந்திய றோலர்கள் வரக்கூடாது.  

அப்படி வருமானால் அமைதிப்பேரணியினை நடாத்துவோம்.  அதனை அரசை பார்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளமுடியும்.

மற்றையது அட்டைத்தொழில், சுருக்குவலைத்தொழில், லைட், டையனமட் ஆகிய தடைசெய்யப்பட்ட தொழில்கள் தென்னிலங்கையிலிருந்து வருகை தரும் மக்களினால் எமது கடற்பரப்பில் செய்யப்படுகின்றது.  

தென்னிலங்கையிலிருந்து வந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களை தடைசெய்யவேண்டிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சுக்குள்ளது.  எமது மாவட்டக் கடற்றொழில் திணைக்களம் கடற்றொழில் அமைச்சு சொல்வதைதான் செய்கின்றது.  

கடற்றொழில் அமைச்சு சொல்வதை கடற்றொழில் திணைக்களம் செய்யவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது.  நாம் தொடர்ந்து பாதிக்கப்படக்கூடாது.  எமக்குள்ள தடைகள் நீங்குமானால் இவ்வருடத்திலிருந்து சிறந்த வாழ்வாதாரத்தை மக்கள் அடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .