2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மீண்டும் மீன்பிடியில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவர்கள்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 04 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு கடலில் ஏற்பட்டிருந்த கடற்கொந்தளிப்பு தணிந்ததையடுத்து, அப்பகுதி மீனவர்கள் 20 நாட்களுக்கு பின்னர் கடலில் இறங்கி மீன்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

நவம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி முதல் வாரம் வரையில் 'ஒரு கடலடி காலம்' என்று அழைக்கப்படுகின்றது. இக்காலப்பகுதியில் கடற்கொந்தளிப்பு அதிகமாக இருப்பதால், அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக மீனவர்கள் கடலுக்குச்செல்வதிலை.     

இம்முறை சுமார் 20 நாட்;கள் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்த நிலையில், தற்போது காலநிலை சீரடைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

முல்லைத்தீவில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .