2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வீதி புனரமைப்புக்காக ஒரு இலட்சம் ரூபாய் நிதி

Kogilavani   / 2015 ஜனவரி 06 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா

தலைமன்னார் பியர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள குறுக்கு வீதியை புனரமைப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளதாக வடமாகான மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் திங்கட்கிழமை (05) தெரிவித்தார்.

ஆலய நிர்வாக சபையினரிடம் இந்நிதியை கையளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள புகையிரதப்பாதையின் குறுக்காக செல்லும் குடியிருப்பு வீதி, போக்குவரத்துக்கு எற்றதாக இல்லையென அப்பகுதி மக்கள் முறையிட்டிருந்தனர்.

இதற்காமைவாக, எனது பணத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் இணைந்து 50,000 ரூபாயுமாக மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .