2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நிதியுதவி கிடைத்ததும் வீதி திருத்தப்படும் - துணுக்காய் பிரதேச செயலாளர்

Kogilavani   / 2015 ஜனவரி 06 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


முல்லைத்தீவு மாவட்டம், கொக்காவில் - துணுக்காய் வீதியின் 10 கிலோமீற்றர் அளவான வீதியை திருத்துவதற்கு இதுவரையில் நிதியுதவி கிடைக்கவில்லையெனவும், நிதியுதவி கிடைக்கப்பெற்றதும் வீதி திருத்தப்படும் எனவும் துணுக்காய் பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்தார்.

20 கிலோமீற்றர் நீளம் கொண்ட மேற்படி வீதியில் 10 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்பட்டு, எஞ்சியுள்ள 10 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படாமல் பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதியூடாக பொதுமக்கள் போக்குவரத்துச் செய்வதை தவிர்த்து வருகின்றனர். அத்துடன், இந்த வீதியினூடாக பஸ் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

இதுதொடர்பில் பிரதேச செயலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 'புனரமைக்கப்படாத வீதியில் காணப்படும், ஐயன்குளம் வான் பாயும் பகுதியிலுள்ள 2 பாலங்கள், தேறாங்கண்டல் குளத்தின் வான் பாயும் பகுதிப்பாலம் மற்றும் பண்ணைப்பகுதி சிறிய பாலம் ஆகியவை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.

வீதியை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதுடன், வீதி புனரமைக்கப்பட்டதும் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.

புத்துவெட்டுவான்; கிராமத்தைச் சேர்ந்த 120 குடும்பங்களும் தேறாங்கண்டல் கிராமத்தை சேர்ந்த 449 குடும்பங்களும் ஐயன்குளக் கிராமத்தை சேர்ந்த 361 குடும்பங்களும் ஏனைய பகுதிகளை சேர்ந்த 300 குடும்பங்களும் இந்த வீதியால் போக்குவரத்து செய்யமுடியாமல் சிரமங்களை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .