2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மல்லாவி, புதுக்குடியிருப்பு வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படவுள்ளன.

George   / 2015 ஜனவரி 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின், மல்லாவி, புதுக்குடியிருப்;பு ஆகிய இரு பிரதேச வைத்தியசாலைகளும் இந்த வருடம்  ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழ்க்கின்ற சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ தேவையை வழங்கும் மல்லாவி மருத்துவமனையும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பரந்த பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான மருத்துவத் தேவையை வழங்கும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையும் தொடர்ந்தும் பிரதேச வைத்தியசாலையாகவே இயங்கி வருகின்றன.  

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் சுகாதார அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியில் இரண்டு வைத்தியசாலைகளிலும் தலா 20 மில்லியன் ரூபாய் செலவில் சத்திரசிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.  

இதனைத் தொடர்ந்து இரண்டு வைத்தியசாலைகளும் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என அந்த தகவல்கள் தெரிவித்தன.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .