2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வட்டக்கச்சி வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 ஜனவரி 07 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டக்கச்சி பிரதேச 'சி' தர வைத்தியசாலை வசதிகள் வாய்ப்புக்கள் செய்யப்பட்டு, தரமுயர்த்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் பா.கார்த்திகேயன் புதன்கிழமை (07) தெரிவித்தார்.

வட்டக்கச்சி மருத்துவமனை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் மத்திய மருந்தகமும் மகப்பேற்று விடுதியும் அமையப்பெற்ற ஒரு வைத்தியசாலையாக இருந்தது. 2009 டிசம்பர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றத்தின் பின்னர் இம்மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படவில்லை.

இதன் காரணமாக வட்டக்கச்சி மற்றும் இராமநாதபுரம் ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வைத்திய சேவைகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது.  

நாள்தோறும் சிகிச்சைகள் நடைபெற்றாலும் இந்த மருத்துவமனைக்கு மகப்பேற்று விடுதி அமைக்கப்படாதது மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தால் விபத்துகள் பாம்புக்கடிகளின் போது ஏற்றப்படும் ஊசிகள் என்பவற்றிற்கு 10 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

வட்டக்கச்சி மருத்துவமனையில் மகப்பேற்று விடுதியை உருவாக்கி இடப்பெயர்வுக்கு முன்னர் மருத்துவமனை இயங்கிய நிலையை மீண்டும் உருவாக்கி தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மக்களின் வேண்டுகோள் தொடர்பில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரை வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வட்டக்கச்சி வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இல்லாத குறை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு நிரந்தர வைத்தியர் ஒருவர் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனார்.

மருத்துவமனைக்கு கூடிய வசதிகளை ஏற்படுத்துதல், மகப்பேற்று விடுதியை உருவாக்குதல், ஆண்கள், பெண்கள் விடுதிகளை உருவாக்குதல் போன்ற தேவைகள் குறித்து மாகாண, மத்திய சுகாதார அமைச்சுக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள்   நடவடிக்கைகளை மேற்கொண்டு வட்டக்கச்சி வைத்தியசாலையை தரமான வைத்தியசாலையாக மாற்ற ஏற்பாடு செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .