2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பலவந்தமாக வாக்குகளை பெறுவதற்கு இலஞ்சம் வழங்கப்படுகிறது: றிஷாட்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மக்களின் வாக்குகளை பலவந்தமாக பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பல்வேறுபட்ட பொருட்களை இலஞ்சமாக வழங்குவதற்கு சிலர் செயற்படுவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், இவ்வாறு பொருட்களை கொடுக்க வரும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு உடன் கொண்டுவருமாறும் கேட்டுள்ளார்.

மன்னார், உப்புக்குளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மன்னார் தவிர்ந்த முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும்இந்த செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெறுவதாக' கூறினார்.

'மக்கள் மிக்க அவதானத்துடன் இருக்குமாறும் இவ்வாறான ஏமாற்றுபவர்களின் வழிகளை நம்பி தமது ஜனநாயக உரிமையினை இழந்துவிட வேண்டாம்' எனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .