2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சி, முல்லைத்தீவில் தொடரும் கிரவல், மணல் அகழ்வு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 07 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மணல் மற்றும் கிரவல் அகழ்வு காரணமாக பெருமளவு மரங்கள் அழிவடைந்து வருவதுடன் சூழலியல் பாதிப்புகளும் பெருமளவில் இடம்பெற்று வருகின்றன.  

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இந்த இரு மாவட்டங்களிலும் வீதிப்புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, புனரமைப்புப் பணிகளுக்காக பெருமளவான கிரவல் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் யூனியன்குளம், அக்கராயன், இராமநாதபுரம் ஆகிய கிராமங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காயின் அமதிபுரம், கோட்டைக்கட்டியகுளம், புத்துவெட்டுவான், பழைய முருகண்டி, ஐயன்கன்குளம், அம்பகாமம், மாந்தை கிழக்கு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய், ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில் பெருமளவு மரங்கள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டன.  

இரு மாவட்டங்களிலுமுள்ள ஆற்றுப்படுக்கைகளில் நாள்தோறும் பெருமளவு மணல் களவாகக் கொண்டு செல்லப்படுகின்றன.  

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டச் செயலகங்களின் அனுமதியில்லாமல் அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் பெறப்படுகின்ற அனுமதிகளுடன் முல்லைத்தீவின் கொக்காவில் பகுதிகளிலும், கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் பின்பகுதிகளிலும் பெருமளவு மணல், கிரவல் அகழ்வுகள் நடைபெறுகின்றன.  

இரு மாவட்டச் செயலகங்களிலும் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் மணல் மற்றும் கிரவல் அகழ்வு களவாக மரம் வெட்டுதல் போன்ற விடயங்கள் மக்களின் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது சூழலியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .