2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் பிரதான பாலத்தில் விபத்து; மூவர் பலி

Thipaan   / 2015 ஜனவரி 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள  மன்னார் பிரதான பாலத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(09) மாலைஇடம் பெற்ற வீதி விபத்தில் மன்னார் பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னாசிலிருந்து வவுனியாவுக்கு சென்ற மன்னார் டிப்போவுக்கு சொந்தமான பஸ், பிரதான பாலம் ஊடாக சென்ற போது பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நோக்கி  சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எஸ்.சத்தியதாஸ் ஜீவா (வயது 50) எனும் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயேலே உயிரிழந்துடன் அவரது மகனான  எஸ்.சரோன் (வயது 11) என்பவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

இவர்களது சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, படுகாயமடைந்த எஸ்.ஜெரூஸ் (வயது 9) என்ற சிறுவன் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்திய சாலைக்கு அம்புலன்ஸில் கொண்டுசெல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பஸ்ஸின் சாரதியை மன்னார் பொலிஸார் கைது செய்ததுடன் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .