2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'ஆட்சி மாற்றம் மக்களின் மனங்களில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கின்றது'

Thipaan   / 2015 ஜனவரி 10 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான்

இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த ஆட்சி மாற்றம் இம்மக்களின் மனங்களில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிம்மதி நிரந்தரமாகத் தொடர்வதற்கு புதிய ஆட்சி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட், இன்று சனிக்கிழமை (10) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காய் ஒன்றுபட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு நன்றி தெரிவித்து கட்சி சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை இனவாதத்தின் கோரப்பிடிக்குள் தள்ளி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடாத்திய அரசைத் தூக்கி வீசுவதற்காக ஒன்றுபட்டு வாக்களித்த முஸ்லிம், தமிழ் சிறுபான்மை சமூகங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வரலாற்றில முதல் தடவையாக ஒரு ஆட்சியாளரைத் தெரிவு செய்வதற்கு சிறுபான்மை மக்கள் 95 சதவீதத்துக்கு மேல் ஒன்றுபட்டு பெரும்பான்மை சமூகத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் விரும்புகின்ற சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்து மைத்திரிபால சிறிசேனவை அரியாசனத்தில் அமர்த்தியிருக்கின்றார்கள்.

இதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் எந்நேரமும் மனதில் இருத்தி செயற்படுவார் என்ற நம்பிக்கையோடு இம்மக்களின் சார்பாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாகவும் புதிய ஜனாதிபதியினை மனதார வாழ்த்துகின்றோம்.

கடந்த இரண்டு வருடங்கள் சிறுபான்மை சமூகங்கள் பொதுவாகவும், முஸ்லிம் சமூகம் குறிப்பாகவும் இனவாதிகள் தொடுத்த தாக்குதல்களினால் ஏற்பட்ட பெரும்  மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார்கள்.

எனவே, பொது எதிரணி ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு தொடர்பாக முடியுமானால் மீள் பரிசீலனை செய்து ஜனாதிபதியின் தேவையற்ற அதிகாரங்களை நீக்கி ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்வது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

அல்லது அம்முறை ஒழிக்கப்படத்தான் வேண்டுமென்றால் பொதுத் தேர்தல் முறைச் சீர்திருத்தத்தில்  முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப பெறப்படுவதை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல்,  மத்திய அரசாங்கத்தில் சிறுபான்மைகள் பார்வையாளர்களாக பங்கு பெறாமல் பங்குதாரர்களாக இடம்பெறக்கூடிய (அயனெயவழசல ளவயமநாழடனநச ளாip)  தேர்தல் முறையாக அது அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும் மீண்டும் வாழ்த்துகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .