2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மடு வெதுப்பகத்தை அகற்றும் கட்டளைக்கு எதிராக மேன்முறையீடு

Menaka Mookandi   / 2015 ஜனவரி 11 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடு தேவாலய சூழலில் அமைந்திருக்கும் வெதுப்பகத்தை அகற்றுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக வெதுப்பகத்தின் உரிமையாளர் சார்பாக சட்டத்தரணி ஆ.யு.ஆ.முபாறக்;, மன்னாரிலுள்ள வடமாகாண மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.
 
மடு தேவாலய  சூழலில் அமைந்திருக்கும் வெதுப்பகத்தை அகற்றுவதற்கு சம்மந்தப்பட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி வழக்கு, 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை கோவையின் பொதுத்தொல்லையின் கீழ் விசாரணைக்கு  எடுக்கப்பட்டிருந்தது.

மத அனுஷ்டிப்புக்கு இடையூறாக இந்த வெதுப்பகம் அமைந்திருப்பதாக தெரிவித்து தொடரப்பட்ட மேற்படி வழக்கின் தீர்ப்பில், முறைப்பாட்டாளர் வெதுப்பகத்தை தமது சொந்த செலவில் அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இம்மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றின் கட்டளைக்கு எதிராக 7ஆம் திகதி மன்னார் மேல்நீதிமன்றில் குறித்த மேன்முறையீடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .