2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யுத்தத்துக்கு பின்னர் மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்துள்ளது: ஜமால்தீன்

Sudharshini   / 2015 ஜனவரி 11 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

இனவாதம், மதவாதங்களை பிரயோகித்து அரசியல் செய்ய முடியாது என்பதை மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் நிரூபித்துள்ளார்கள். யுத்தத்துக்கு பின்னர் மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்துள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜமால்தீன் ரிசாம் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன வெற்றியடைந்துள்ளமையைக் கொண்டாடும் விஷேட நிகழ்வொன்று நேற்று சனிக்கிழமை (10) முல்லைத்தீவு நெடுங்கேணி சந்தியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

கடந்த முப்பது வருடங்களாக நாட்டில் புரையோடிக்கிடந்த யுத்தம் முடிவடைந்து சுதந்திரம் ஏற்பட்ட போது கூட, மக்கள் இவ்வாறானதொரு மகிழ்ச்சியைக் கொண்டாடவில்லை. அந்தளவுக்கு முன்னாள் ஜனாதிபதி மீது மக்கள் வெறுப்புடன் இருந்துள்ளார்கள்.
இனவாதங்களை பேசி இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியலின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.

எனவே, தற்போதைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான புதிய அரசாங்கத்தில், இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் என்பவற்றுக்கு இடம் கிடையாது. நாம் எல்லோரும் ஒரே நாட்டு மக்கள் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக செயற்படுவோம்.

புதிய அரசாங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தை மேலும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டே அபிவிருத்திப்பணிகளை செய்வதுக்கு ஆசைப்படுகிறோம்.

எனவே, எதுவிதமான பேதங்களுமின்றி எல்லோரும் ஒற்றுமைப்படவேண்டியது காலத்தின் தேவையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .