2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஊழலுக்கு இடமளிக்காது புதிய அரசாங்கம் செயலாற்ற வேண்டும்: அடைக்கலநாதன்

Gavitha   / 2015 ஜனவரி 11 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

ஊழல் இடம்பெறும் வாய்ப்புக்களை இல்லாதொழித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம் செயற்படவேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது தேர்தல் பிரசாரங்களின் போது, ஊழலற்ற இலங்கையை உருவாக்க முனைவதாகவும் அதற்கு எதிராக சட்டத்தின் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், த.தே.கூ. இவ்வாறான நல்லெண்ண செயற்பாடுகளுக்கு கைகொடுக்க என்றும் முனைப்புடன் உள்ளது. இவ்வாறான நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில், பல்வேறு ஊழல்களுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனைகளை பெற்றுக்கொடுப்பதற்கு என்றும் பின் நிற்காத ஆட்சியாக இவ்வரசின் செயற்பாடுகள் அமையவேண்டும்.

இவ்வாறான நிலையில் அரச உத்தியோகஸ்தர்களை அடக்கி சர்வாதிகார செயற்பாடுகளுக்கு துணை போகின்றவர்களுக்கு அதிகாரங்களை வழங்க கூடாது என்பதில் வன்னி பிராந்திய தமிழ் மக்கள் கரிசனை கொண்டுள்ளனர்.

அரசியல் கலப்பின்ற சுதந்திரமாக அரச உத்தியோஸத்தர்கள் செயற்படும் வாய்ப்புகளும் உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக ஆக்கப்படாமலும் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.

கடந்த ஆட்சியில் பல்வேறான புறக்கணிப்புகளுக்கு உள்ளான தமிழ் மக்கள், ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்துள்ள நிலையில், மீண்டும் புதிய ஆட்சியிலும் அம்மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களை, இப்பிரதேசங்களில் உருவாக்கும் வகையில் சிலரின் கைகளில் அதிகாரங்களை ஜனாதிபதி வழங்க கூடாது என்பதை எமது மக்களின் சார்பில் தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .