Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
புதிய ஜனநாயக மாக்சிச - லெனினிசக் கட்சியும் தொழிற்சங்கங்களும் பொது அமைப்புகளும் இணைந்து உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து, மே தினத்தை வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளன.
அந்த வகையில் வன்னிப் பிராந்தியத்தில் உழைப்பாளர் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் முன்வைக்கவும் அதனை வென்றெடுக்க தொழிலாளர் சக்தியை அணிதிரட்டி, தொழிலாளர் விவசாயிகள், மீனவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் என்போரது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதன் மூலம் மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுக்கவும் இம்முறை உழைப்பாளர் தினமான மேதினத்தை நினைவு கூர்வதாக புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் இன்று (29) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மகிந்த சிந்தனை அரசை குற்றஞ்சாட்டி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட மைத்திரி - ரணில் அரசாங்கம், மெதுவாக உழைப்பாளர், விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளத் தொடங்கியுள்ளது.
மைத்திரி - ரணில் அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்சொல்லப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்தில் விவசாயிகளின் விவசாய வங்கிக் கடன் ஐம்பது வீதத்தால் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ஒரு கிலோ நெல்லை ஐம்பது ரூபாவிற்கு அரசாங்கம் வாங்கும் எனவும் கூறியது.
ஆனால் அவ்வாறு செய்யாது விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயம். எனவே, ஆளும் முதலாளித்துவ அரசாங்கமானது ஒருபோதும் தொழிலாளர், விவசாயிகளின் நலனில் அக்கறை எடுக்காது என்பது உழைக்கும் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும்.
எனவே இம்முறை தொழிலாளர், விவசாயிகள் மற்றும் ஏனைய உழைக்கும் சக்திகளையும் ஐக்கியப்படுத்தி மே தின ஊர்வலத்தையும், பொதுக்கூட்டத்தையும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மே தின ஆர்ப்பாட்ட பேரணி காலை 9.30 மணிக்கு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக தொடங்கி, காலை 10.30 மணிக்கு நகரசபை மண்டபத்தை அடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும்.
ஆகவே உழைப்பாளர், விவசாயிகள் மற்றும் ஏனைய உழைக்கும் வர்க்க சக்திகளை ஆர்ப்பாட்டப் பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் பங்குபெறுமாறு புதிய ஜனநயக மாக்சிச-லெனினிசக் கட்சி அழைப்பு விடுக்கின்றது என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .