2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் வெளிச்ச வீடு அமைக்குமாறு கோரிக்கை

George   / 2015 மே 11 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மீனவர்களின் நலன்கருதி அப்பகுதியில் வெளிச்ச வீடொன்றை அமைத்துத் தருமாறு முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சங்கமும் நகர அபிவிருத்திக் குழுவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

முல்லைத்தீவு கரையோரத்தில் அமையப்பெற்றிருந்த வெளிச்சவீடு 1990ஆம் ஆண்டுக்கு பிறகு செயலிழந்தது. 

இதன் பின்னர் புதிய வெளிச்ச வீடுகள் எதுவும் அமைக்கப்படவில்லை. ஆழ்கடல் தொழில் செய்யும் கடற்றொழிலாளர்கள் வெளிச்சவீடு இல்லாமையால் பெரும் இடர்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .