2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

இவ்வருடத்துக்கான வரவு- செலவு திட்டத்தின் கீழ், 180 நாட்கள் கடமையாற்றிய மன்னார் நகர சபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் 11 பேருக்கான  நிரந்தர நியமனங்கள் நேற்று  வெள்ளிக்கிழமை (15) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையில் 180 நாட்கள் கடமை புரிந்தவர்களை உள்வாங்கும் அடிப்படையில் 11 சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு இவ்வாறு நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.துரம், மன்னார் நகர சபையின் செயலாளர் லெனாட் பிரிட்டோ, நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் மற்றும் நகர சபை உறுப்பினர்களான இரட்ணசிங்கம் குமரேஸ், மெரினஸ் பெரேரா, செல்வக்குமரன்(டிலான்) ஆகியோர் இணைந்து குறித்த சுத்திகரிப்பு பணியாளர்கள் 11 பேருக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .