2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் நேர மாற்றம்: தேவராஜா

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் 18ஆம் திகதி காலை 9 மணிக்கு அனுஸ்டிக்கப்படவிருந்த முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகளை, 18 ஆம் திகதி மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானித்துள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கே. தேவராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் காலை நடத்தப்படவிருந்ததது.

எனினும், அன்றைய தினம் காலை முள்ளிவாய்க்காலில், வட மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து நினைவு தினத்தை அனுஸ்டிக்கவுள்ளமையினால் வவுனியாவில் காலை 9 மணிக்கு நடத்த திட்டமிட்டிருந்த நிகழ்வு மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, யுத்தத்தில் இறந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அன்றைய தினம் அனைவரையும் அழைப்பதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .