2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

கடற்றொழில் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த நான்கு மீனவர்களையும் தொடர்ந்து 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முகம்மது சம்சுதீன் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாது,

இதன்படி குறித்த நான்கு மீனவர்களும் வெள்ளிக்கிழமை (15) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, குறித்த நான்கு மீனவர்களுக்கும் பிணை வழங்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

எனினும், குறித்த மீனவர்களுக்கு பிணை வழங்குவதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்தனர்.

அதனையடுத்து,  அவர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 19ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கும்படி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


முல்லைத்தீவு நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த மீனவர்களை பிடிப்பதற்காக குறித்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடந்த புதன்கிழமை மாலை நந்திக்கடலில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை சுற்றிவளைத்த நான்கு மீனவனர்களும்; திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவச் சங்க பிரதிநிதிகளிடம் தரக்குறைவாக பேசியதுடன், வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் முள்ளியவளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் குறித்த நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .