Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மே 17 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
தமது மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மன்னார், மறிச்சிக்கட்டி கிராம மக்கள் நேற்று சனிக்கிழமை (16) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
தேசப்பற்றுள்ள முஸ்லிம் முன்னணி எனும் அமைப்பினரின் தலைமையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றன.
மன்னார் வில்பத்து வனப்பகுதியை அழித்து அங்கு முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக பொது பல சேனா, சிங்கள ராவய மற்றும் ஒருசில ஊடகங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் குழு நேற்று சனிக்கிழமை முசலி பிரதேச கிராமங்களுக்கு விஜயம் செய்தன.
இதன்போதே மறிச்சக்கட்டி கிராம மக்கள் தமது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மறிச்சிக்கட்டி எமது பூர்வீக பூமி, வில்பத்து மிருகங்களின் வசிப்பிடம். ஆனால் மரிச்சிக்கட்டி எமது வசிப்பிடம், வில்பத்து பிரச்சினையின் பின்னணியில் முஸ்லிம் விரோத அமெரிக்க மிஷனரிகளுடன் தமிழ் டயஸ்போரா, வில்பத்துவை காக்கும் போர்வையில் மரிச்சிக்கட்டி முஸ்லிம்களை துரத்திய சதியை முறியடிப்போம், வாழ்விட பூமி கேட்டுப்போராடிய முஸ்லிம் சமூகத்துக்கு அமைச்சர் ரிஷாட் உதவி செய்தது தவறா?' இதுபோன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
06 Jul 2025