Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 27 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மேற்குலக நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினையை தமது நலன்களில் நின்றே கையாண்டு வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக தமது நாட்டின் நலன்களுக்கே மேற்குலக நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
கிளிநொச்சி, திருநகர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ் மக்களின் பிரச்சினையின் பொருட்டு சர்வதேசத்தின் மீது அதிகளவான நம்பிக்கை தமிழ் மக்களிடம் கட்டியெழுப்பட்டுள்ளது. இந்த நம்பிகையினை கட்டியெழுப்பியவர்களுக்கு கூட தெரியும் சர்வதேச நாடுகள் தங்களின் நலன்களுக்கு அப்பால் சென்று எந்தவொரு நாட்டின் பிரச்சினையிலும் தலையீடுகளை மே;றகொள்ளாது என்பது. இருந்தும் தங்களின் சுயலாப அரசியலுக்காக மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றார்கள்' என்றார்.
சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகிறார்கள். இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விதத்தில் சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன.
இதற்கு காரணம் இந்துமா சமுத்திரத்தில் இலங்கை கேந்திர முக்கியத்துவமுள்ள இடத்தில் அமைந்துள்ளமை. இலங்கையில் தங்களது தளங்களை அமைத்தால் பிராந்தியத்திலுள்ள நாடுகளை கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்திலேயே செயற்படுகின்றனர்.
சர்வதேச நாடுகள் இலங்கையை தமது தேவைகளுக்காக பயன்படுத்த முயற்சிக்கின்றன. இவ்வாறு பயன்படுத்தும் போது மத்திய அரசு அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டால் தமிழ் மக்களைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள்.
மத்திய அரசு இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு தடையாகவிருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையில் அக்கறையுள்ளவர்கள் போன்று செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள். இது காலம் காலமாக நடந்து வருகின்றது.
இலங்கை தொடர்பில் சர்தேச நாடுகளின் கடந்தகால செயற்பாடுகளை உற்று நோக்கினால் இது வெளிப்படையாகவே தெரியும்.
இதனை மேற்குலக நாடுகள் ஒரு தந்திரோபாயமாக கையாண்டு வருகின்றன தமது நலன்களுக்காகவே தமிழ் மக்களை காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றன என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago